QR Code For Trees: "என்னது மரங்களுக்கு எல்லாம் க்யூஆர் குறியீடா.." சிவகங்கையில் முதன் முறையாக அறிமுகம்..!

சிவகங்கையில் க்யூஆர் குறியீடு மூலம் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

QR Codes For Trees (Photo Credit: @backiya28 X)

மே 28, சிவகங்கை (Technology News): சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கீளாதிரியில், 2020ம் ஆண்டு 34 ஏக்கர் பரப்பளவில் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை தொடங்கப்பட்டது. அங்கு ரிவால் பனை, ராஜபனை, கல்யாண முருங்கை, புங்கை மரம், புன்னைமரம், வேங்கை, நாகலிங்கம், உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மூலிகை மரங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. Team India Head Coach: "மோடி, அமித்சாவின் அடுத்த இன்னிங்ஸ்.." இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்களா?.!

இதையடுத்து மாவட்டத்தில் முதன் முதலாக இங்கு வளர்க்கப்படும் மரங்களுக்கு 'QR code' வழங்கப்பட்டுள்ளது. இதை செல்போனில் ஸ்கேன் செய்யும் பொழுது அதாவது இந்த மரத்தின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தின் பெயர் மற்றும் அந்த மரத்தின் உள்ள பூக்கள், காய்கள், இலைகள் ஆகியவற்றின் பயன்பாடுகள் என்ன என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் க்யூ ஆர் குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மரங்கள் பற்றி தகவல்களை அறிந்து கொண்டு கன்றுகளை வாங்கி செல்ல முடியும் என தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்.