Bland AI Voice Bot Lies: பொய் கூறும் செயற்கை நுண்ணறிவு.. 14 வயது பெண்ணிடம் ஆபாச புகைப்படம்.. வைரலாகும் வீடியோ..!
சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI பாட் ஒரு பெண்ணை அழைத்து, அவளது ஆபாச புகைப்படங்களை பகிர கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 02, சான் பிரான்சிஸ்கோ (Technology News): செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இன்றைய உலகில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது ஒரு கணினி மனிதனைபோன்று யோசித்தால், அல்லது மனிதன் போன்று செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுவதால், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் AI தளங்களை உருவாக்கி வருகின்றது. இதனால் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
பிளாண்ட் ஏஐ: அந்த வகையில் செயற்கை முன்னறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது செல்போன் அழைப்புகளும் செய்கின்றனர். அதன்படி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிளாண்ட் ஏஐ என்ற தளம் ரோபோ கால் சேவையை உருவாக்கியுள்ளது. அந்த செயற்கை நுண்ணறிவுடன் பேசும்பொழுது மனிதர்களுடன் பேசுவது போன்று இருக்கும். தற்போது இரு தொடர்பான வீடியோ ஒன்று தான் வெளியாகி வைரலாகி வருகிறது. Assam Flood: வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்.. 6 லட்சம் பேர் பாதிப்பு.. 45 பேர் பலி..!
அந்த வீடியோவில் ஒருவர் பிளாண்ட் ஏஐ_யின் விளம்பர பலகையில் உள்ள எண்ணிற்கு அழைப்பு விடுக்கிறார். அந்த ரோபோ பேசுவதும் மனிதர்கள் பேசுவதும் ஒன்றாக இருப்பது போன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த ரோபோ அழைப்பின் இப்போது தான் ஒரு செயற்கை நுண்ணறிவு என்பதனை குறிப்பிடவே இல்லை. தன் பெயரை பிளான்ட் என மட்டுமே குறிப்பிட்டது. இதனால் செயற்கை நுண்ணறிவு பொய் கூறுகிறது என்ற சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் மற்றொரு இடத்தில் பிளான் ஏஐ 14 வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் ஆபாச படங்களை பகிருமாறு கூறியுள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலமே இவை அனைத்தும் கட்டுப்படும் என்றும் கூறி வருகின்றனர்.