ஜூலை 02, அசாம் (Assam News): இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையானது எப்போதும் ஜூன் மாத கடைசியில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் கன மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கனமழை காரணமாக அசாமில் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Indian 2 Calendar Song: 'பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே..' இந்தியன் 2 காலண்டர் பாடல் வெளியீடு..!
அசாம் வெள்ளம்: இதனால் ஆறு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகள் என எட்டு ஆறுகளில் வெள்ள நீர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் வீடுகள் மூழ்கியுள்ளதால் தங்க இடமின்றி பலர் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டும் இன்றி வனவிலங்குகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் என அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.