Elon Musk Threatens To Ban iPhone: ஐபோன்களுக்கு தடை.. எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு..!

தனது கம்பெனிகளில் ஐபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Ban iPhone (Photo Credit: @elonmusk X)

ஜூன் 11, கலிபோர்னியா (Technology News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். மற்றொரு பக்கம் நியூராலிங்க் (Neuralink) அமைப்பின் சார்பில் மனிதர்களின் மூளையில் ஸ்டார்ட்டர் சிப் பொருத்தி, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பரிசோதனை செய்து வந்தார். அதுமட்டுமின்றி இந்த பரிசோதனையின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும், முதல் மனிதர் நியூராலிக்கை பொருத்தி, அவர் நலமுடன் இருப்பதாகவும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருந்தார். இவர் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பல பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.

எலான் மஸ்கின் மிரட்டல் பதிவு: அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. அதாவது OpenAI உடனான ஆப்பிளின் புதிதாக அறிவிக்கப்பட்ட கூட்டாண்மை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் ஐபோன் தயாரிப்பாளர் ஓபன்ஏஐ இயக்க முறைமை மட்டத்தில் ஒருங்கிணைத்தால் தனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களைத் தடைசெய்வதாகவும் ஏனெனில் இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் ஆகும் எனவும் கூறியுள்ளார். Blinken Heads To Middle East: கொடூரமாகும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. போரைக் கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் சுற்றுப்பயணம்..!

ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பு: எலான்மஸ்க்கின் இந்த பதிவு ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களில் சாட் ஜிபிடி தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் விதமாக ஏஐ தொழில் நுட்பத்தின் சில அம்சங்களை தனது செயலிகள் மற்றும் இயங்கு தளத்தில் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்தது.