Bangladesh Vs West Indies, 3rd T20I (Photo Credit: @Cricket_World X)

அக்டோபர் 31, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இதனையடுத்து, நடைபெற்ற முதலிரண்டு டி20ஐ போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 31) சட்டோகிராமில் நடைபெற்றது. BAN Vs WI, 3rd T20I: ஹசன் தமீம் அதிரடி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 152 ரன்கள் இலக்கு..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டான்சித் ஹசன் தமீம் அதிரடியாக விளையாடி 89 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3, ஜேசன் ஹோல்டர் மற்றும் காரி பியர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 50 ரன்கள், அக்கீம் அகஸ்டே 50 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), பர்வேஸ் ஹொசைன் எமன், நூருல் ஹசன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நாசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), அமீர் ஜாங்கூ, ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அகேல் ஹொசைன், காரி பியர்.