அக்டோபர் 31, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இதனையடுத்து, நடைபெற்ற முதலிரண்டு டி20ஐ போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 31) சட்டோகிராமில் நடைபெறுகிறது. INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டான்சித் ஹசன் தமீம் அதிரடியாக விளையாடி 89 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3, ஜேசன் ஹோல்டர் மற்றும் காரி பியர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வங்கதேச அணி வீரர்கள்:
சைஃப் ஹாசன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), பர்வேஸ் ஹொசைன் எமன், நூருல் ஹசன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நாசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), அமீர் ஜாங்கூ, ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அகேல் ஹொசைன், காரி பியர்.