HDFC Bank To Stop UPI Services Temporarily: எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே உஷார்.. வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை தற்காலிக நிறுத்தம்..!
எச்டிஎப்சி வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை உட்பட சில அத்தியாவசிய சேவைகள் ஜூலை 13 அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 02, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். TN Weather Update: மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வீசப்போகும் சூறாவளி.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதியன்று எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) நெட் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் இணையதளத்தில் வைப்புத்தொகைகள், நிதி மற்றும் வங்கி பரிமாற்றங்கள், கணக்குகள் மற்றும் ஆன்லைன் பணம் செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியாது. காலை 3:30 முதல் 3:45 மற்றும் 9.30 முதல் மதியம் 12.30 வரை இந்த சேவைகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நேரத்தில் UPI மூலமாக கூட வாடிக்கையாளர்களால் பணம் செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.