Home Insurance Policy: பைக் இன்சூரன்ஸ் தெரியும்.. லைப் இன்சூரன்ஸ் தெரியும்.. ஆனா வீட்டுக்கு இருக்க இன்சூரன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா? விபரம் உள்ளே..!
ஆனால், வீடு காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.
ஆகஸ்ட் 07, புதுடெல்லி (New Delhi): முன்பை விட தற்போது பலரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனிநபர் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என அனைத்திற்கு இன்சூரன்ஸ் செய்து வைக்கிறார்கள். சேமிப்பு முதலீடு போன்று காப்பீடு எடுப்பது எதிர்கால நிதிப் பற்றாக்குறையை சாமளிக்க உதவும் வழிமுறையாகும். காப்பீடு (Insurance Policy) எடுப்பதன் முக்கியமான நோக்கமே திடீரென எதிர்பாராமல் தேவைப்படும் நிதிநிலையை சமாளிக்கவே.
வீடு காப்பீடு: இவைகளைப் போலவே வீடுகளுக்கு காப்பீடு (Home Insurance) எடுத்து வைப்பது எதிர்காலத்தில் மிகுந்த பயனளிக்கிறது. வீடு கட்டுவது ஒரு கனவு இலக்காக இருந்து வருகிறது. ஆசையாக கட்டிய வீடு எதிர்பாராத சம்பவங்களால் சேதமடைந்தால், அதை சரிசெய்ய பணத்தேவை ஏற்படும். வீட்டு காப்பீடு, சொத்துக் காப்பீடு என்றும் கூறலாம். இதில் தனிப்பட்ட சொத்துக்கள், வீட்டின் கட்டமைப்புகளை உள்ளடங்கும். மேலும் வீடு கட்டமைப்பு மட்டுமின்றி கேரேஜ், கொட்டகை, வணிக வளாகம், மேலும் வீட்டிம் பிற பகுதிகளையும் சேர்த்து காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். Investment Ideas: முதலீடு யோசனையா? இந்த விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு பணத்தை போடுங்க..!
இந்த காப்பீடு, வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்திற்கு காப்பீடை வழங்குகிறது. மேலும் இயற்கை பேரிடரில் ஏற்படும் சேதத்திற்கு கவரேஜை வழங்குகிறது. நிலநடுக்கம் வெள்ளம் ஏற்படும் காலத்தில் வீடுகள் அதிகமாக சேதமடைகிறது. இவைகளை பழுது பார்பதற்கு இழப்பீடை வழங்குகிறது. திருட்டு சம்பவங்களில் ஏற்படும் சேதாரத்தையும் சரி செய்ய் இழப்பீடு வழங்கப்படும். பாலிதிதாரர்கள், காப்பீட்டுத் தொகைக்கு ஈடான, பீரீமியங்களை செலுத்த வேண்டும்.