ஆகஸ்ட் 05, புதுடெல்லி (New Delhi): முதலீடுகள் என வரும்போது பெரும்பாலானவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். முதலுக்கு மோசம் போகாத அதே வேளையில் கணிசமான ஒரு லாபத்தை அளிக்க கூடிய முதலீட்டு திட்டங்கள் தான் சாமானிய மக்களின் விருப்பம். Stock Market Crash: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. அதுவும் வாரத்தின் முதல் நாளே.. அதலபாதாளத்திற்கு சென்ற பங்கு..!
முதலீடு யோசனை:
- எதற்காக, எவ்வளவு, எதில் சேமிக்கிறோம் என்று அறிந்து வைத்திருப்பது மிக அவசியம். இலக்குகளை தீர்மானித்து எட்ட வேண்டிய வருடத்திற்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.
- வாகனம், வீடு, குழந்தைகள் எதிர்கால படிப்பு, திருமணம் என தனிதனி தேவைகள் இருக்கும். ஒவ்வொன்றிற்கும் கால அளவு வேறுபடும் அதற்கு ஏற்ப குறுகிய கால முதலீடா நீண்ட கால முதலீடா என அறிந்து பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இருக்கும்.
- நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள், மொத்தமாக முதலீடு செய்யாமல் தொடர்ச்சியான முதலீடாக இருந்தால் பெரிய இலக்கை எளிதில் அடையலாம். மாதாந்திர சேமிப்பாக இருந்தால் பெரிய அளவில் நிதி பிரச்சனையும் ஏற்படாது. தொடர்ச்சியான முதலீடும் அவசியம்.
- எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் சரியான நேரத்தில் ரிட்டன்ஸ் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ரிஸ்க் உள்ள முதலீடா குறைவான முதலீடா என ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். எதுவாயினும் நிதி ஆலோசகரின் ஆலோசனையின்றி எந்த ஒரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யக் கூடாது.