Air Cooler Buying Guide: அடிக்கிற வெயிலுக்கு ஏர்கூலர் வாங்க போறீங்களா.? அப்ப இத தெரிஞ்சுக்கோங்க..!
இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மே 3, புதுடெல்லி (New Delhi): கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணியிலிருந்தே வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதே நிலை தான் இருக்கிறது. இதனால் ஏர் கூலர்களை (Air Cooler) வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏர் கூலர்களை வாங்கும் முன்பு சில முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். Dubai Floods: மீண்டும் துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!
ஏர் கூலர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: ஏர் கூலர் வாங்கும் பொழுது முதலில் நாம் நம்முடைய அறையின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பர்சனல் கூலர்களையும் (Personal Cooler) 300 சதுர அதிகரிக்கும் மேல் உள்ள அறைக்கு டெசர்ட் கூலர்களையும் (Desert Cooler) வாங்க வேண்டும். அதேபோன்று சிறிய அறைகளுக்கு 15 லிட்டர் தொட்டி கொண்ட ஏர்கூலர்களையும் பெரிய அறைக்கு 40 லிட்டர் தொட்டி கொண்ட ஏர்கூலரையும் வாங்குவது நல்லது. அதேபோன்று ஏர் கூலரில் இருந்து அதிக சத்தம் வரும். எனவே கடைகளில் வாங்கும் போது அதன் இரைச்சல் அளவை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும். அதிநவீன ஏர் கூலர்கள் ரிமோட் கண்ட்ரோல், கொசு தடுப்பு (Anti mosquito), டஸ்ட் ஃபில்டர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. எனவே இது போன்ற அம்சங்களைக் கொண்ட ஏர் கூலர்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.