மே 3, துபாய் (World News): துபாய் (Dubai) என்றால் பாலைவன நாடு, அங்கு பொதுவாக மழை பெய்வது இல்லை என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் அங்கு திடீரென கடந்த வாரம் கன மழை பெய்தது. துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவின்படி 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. World Press Freedom Day 2024: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்.. உலக பத்திரிகை சுதந்திர தினம்...!

இந்த நிலையில், துபாயில் இன்று மீண்டும் கனமழை பெய்தது. இந்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. துபாயின் மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மேலும் துபாய் வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.