Electric Shock From Refrigerator: திடீரென வெடித்து சிதறும் ஃபிரிட்ஜ்.. விபத்து ஏற்படாமல் தப்பிப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ..!

தவிர்க்க முடியாத அத்யாவசிய சாதனமாக இருக்கும் ஃபிரிட்ஜை எப்படி சரியான முறையில் பராமரித்துக் கையாள்வதை என்பதைக் காணலாம்.

Fridge (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 12, புதுடெல்லி (New Delhi): குளிர்சாதனப்பெட்டி என்பது வீட்டில் ஒரு அடிப்படை பொருள் போல் ஆகிவிட்டது. திருமணம் செய்து கொடுக்கையில் சீதனத்தில் முக்கிய பொருளாக குளிர்சாதனப்பெட்டி (Fridge) இருக்கிறது. குளிர்பானங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளை ஃப்ரிட்ஜில் (Refrigerator) வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளிர்சாதனப்பெட்டியை முறையாக பயன்படுத்தாமல் விடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. குளிர்சாதனப்பெட்டி வெடித்து நடைபெற்ற விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பிரிட்ஜ் விபத்து: உங்கள் குளிர்சாதனப்பெட்டி வெடிப்பதற்கு முக்கிய காரணம், அதன் கம்ப்ரசர், இது யூனிட்டின் பின்புறத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பம்ப் மற்றும் மோட்டாரைக் கொண்டுள்ளது. இது குளிர்பதன வாயுவை அதன் சுருள் பைப்புகள் வழியாகத் தள்ளும். இந்த வாயு குளிர்ந்து திரவமாக மாறும்போது, ​​குளிர்சாதனப்பெட்டி வெப்பத்தை உறிஞ்சி, உள்ளே இருக்கும் அனைத்து பொருட்களையும் குளிர்விக்கும். ஆனால் சில நேரங்களில், குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் மிகவும் சூடாகலாம். இது மின்தேக்கி சுருள்களை (Pipe) சுருங்கச் செய்கிறது. அழுத்தப்பட்ட சுருளுக்குள் அதிக வாயு குவிவதால், காலப்போக்கில் அழுத்தம் வெடிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் காற்றோட்டமாக இருக்கும் வகையில் அரை அடியாவது காலியாக இருக்க வேண்டும். Gold Loan Guide: நகைக்கடன் வாங்கியோர் கவனத்திற்கு.. நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?.. விபரம் இதோ.!

மின் துண்டிப்பு ஏற்படும் போதும், பிரிட்ஜ் ஆஃப் செய்த போதும் நீர் வெளியேறும் பகுதியை சோதனை செய்வது நல்லது. நீர் வெளியேறி கம்ப்ரசர் மீது விழும் வகையில் விடக்கூடாது. இதனால் வையர் ஷார்ட் சர்க்யூட் (Wire Short Circuit) ஆக வாய்ப்புள்ளது. வெளியூர்களுக்குச் செல்லும் பணி இருந்தால், குளிர்சாதனப்பெட்டியை ஆஃப் செய்துவிட்டு செல்வது சிறந்தது.

பராமரிப்பு முறைகள்: