செப்டம்பர் 11, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு காரணமே அவசர காலத்தில் நிதித்தேவையை பூர்த்தி செய்வதற்காக தான். தனித்தனியாக சேமிப்பை மேற்கொள்ளாதா நடுத்தர மக்கள், அவசர காலத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பது தங்கநகைகள் மீது தான். நகைகளை வைத்து பெறும் கடன்கள் மக்களுக்கு உடனடியாக கிடைப்பதாலும், தேவையான நேரத்தில் நகைகளை மீட்டு பயன்படுத்திக் கொள்வதாலும் நகை கடன்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். இதனால் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நகை கடன்களை வாரி வழங்குகின்றனர். ஆனால் அவசரத் தேவைக்காக நகைகள் வைக்கப்படுவதால் பலரும் நகை கடன் பற்றிய விழிப்புணர்வின்றி கணிசமான தொகையை இழக்கின்றனர். நகைகளை வைத்து கடன் பெறும் போதும், நகைகளை மீட்கும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நிதி நிறுவனம் பற்றிய விழிப்புணர்வு: பணத்தில் மேலேயேகுறியாக இருப்பதால் அவசரத்தில் அடகு வைக்கும் நிதி நிறுவனங்களை கவனிக்காமல் இருந்து விடுவோம். வீடு மற்றும் நிலத்தை வைத்து வாங்கும் கடன்களில் பொருட்களை திருடி விடுவர் என்ற ஆபத்து இல்லை. ஆனால் நகைகடனில், நிறுவனத்தில் திருட்டு ஏற்பட்டாலோ அல்லது நிறுவனம் நஷ்டத்திற்கு சென்றாலோ பொருட்களுக்கு ஆபத்து நேரிடும். அதனால் அந்நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நிறுவனம் நம்பகத்தன்மை உடையதா என சரிபார்க்க வேண்டும். தனக்கு தேவை என்பதால் அதிக வட்டிக்கு நகைகளை நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களில் வைக்க கூடாது. செயல்பாட்டுக் கட்டணங்களை நிதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்து நகைகளை வைக்கலாம். Free Aadhaar Update: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு! உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!
நகைகளில் கவனம்: நகை கடனுக்காக வைக்கும் நகைகள், நாணயங்கள், எந்த வடிவத்தில் எவ்வளவு எடை இருக்கிறது என அனைத்தை கவனித்து விட்டு வைக்க வேண்டும். திரும்பிப் பெறும் போதும் அதே வடிவம், அதே எடையில் உள்ளதா என கவனிக்க வேண்டும். சில நிதி நிறுவனங்கள் தவறான நகைகளை வழங்க வாய்ப்பிருக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. நகைகளை வைப்பதற்கு முன் போட்டோ எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
நகை கடன் மோசடி: அனைத்து இடங்களிலும் மோசடிகள் நிகழத்தான் செய்கின்றன. கவனமாக இல்லாத பட்சத்தில் நகைகளை இழக்கக்கூட நேரிடும். தள்ளுபடி, சலுகைகள் என அதிகம் பணம், குறைந்த வட்டி, எனக்கூறி மோசடிகள் காலம் காலமாக நிகழ்கிறது. ஆனால் சரியாக தவணைகள் கட்டி, குறுகிய காலத்தில் நகைகளை மீட்டால் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் சிலர் நகைகளை வைத்திருப்பதுடன் மெலும் மற்றொரு நகைகயையும் சேர்த்து வைப்பர். அப்போது சரியாக எழுதுகிறார்களா என கவனிப்பது அவசியம். சில நிறுவனங்கள் இதை சரியாக எழுதாமல் விடுவதால் நகைகளை மீட்டும் போது சிக்கலை ஏற்படுத்துவதுடன் நகையை இழக்கவும் நேரிடும். நகை கடனுக்காக வாங்கி சீட்டு, பில், பத்திரங்கள் என அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.