Winter Solstice: இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்..!
இந்நிலையில் இன்று இயற்கை அதிசயத்தை அனுபவிக்கும் படி ஒரு நிகழ்வு இந்தியாவில் நடைபெற உள்ளது.
டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): இன்று இயற்கை அதிசயம் ஒன்று நிகழ இருக்கிறது. அதாவது இன்றைய தினம் தான் நாம் மிக நீண்ட இரவையும் மிகக் குறுகிய பகலையும் அனுபவிக்க உள்ளோம். இன்று காலை எழும் போது, சூரியனையே காணோம் என்பதை கவனித்தீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது. அதேபோல இன்று மாலையும் சூரியன் சீக்கிரமே மறைந்து விடும். C V Shanmugam Confirmed For Corona: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா... தொண்டர்கள் அதிர்ச்சி..!
இந்தியாவின் குளிர் காலம்: இந்தியா முழுக்க குளிர் காலம் இருக்கும் நிலையில், நமது நாடு இன்று மிக நீண்ட இரவுக்குத் தயாராகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22ஆம் தேதி தான் நமது நாட்டில் மிக நீண்ட இரவும் குறுகிய பகல் வேளையும் இருக்கும். அதன்படி இன்றைய தினம் மிக நீண்ட இரவு நமக்குக் காத்திருக்கிறது. இதை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் Winter Solstice எனக் கூறுகின்றனர்.