Japan To Launch Dating App: ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்.. டேட்டிங் ஆப் மூலம் அதிகரிக்க புதிய முயற்சி..!
ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க டேட்டிங் ஆப் அறிமுகம் செய்துள்ளனர்.
ஜூன் 6, டோக்கியோ (World News): நாட்டின் பலமே அந்நாட்டின் மக்கள்தான். இன்றைய குழந்தைகள்தான் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள்தான் அந்த நாட்டின் எதிர்காலம். அதற்கு அடித்தளமான பிறப்பின் எண்ணிக்கை குறைந்தால், அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகலாம். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். எனவே பிறப்பு எண்ணிக்கை விகிதம் குறையாமல் இருக்க நாடுகள் கவனமாக இருக்கும்.
ஜப்பானின் பிறப்பு விகிதம்: இந்நிலையில் ஜப்பானில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு பக்கம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மற்றொரு புறம் பிறப்பு விகிதம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு, 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் புதிதாகப் பிறந்ததோ 8 லட்சம் பேர் தான். ஜப்பானில் குழந்தையை வளர்க்க ஆகும் செலவு, பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் அங்கே பல இளைஞர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை தவிர்க்கிறார்கள். TN Weather Report: தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
டேட்டிங் ஆப்: இதனால் ஜப்பான் அந்நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கூட இன்சூரன்ஸ் சேவைகளை வழங்கியது. இருப்பினும் அங்கு பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது அந்நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க டேட்டிங் ஆப்பினை அறிமுகம் செய்துள்ளனர்.