IPL Auction 2025 Live

Aditya L-1 Reaches the Final Destination: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1... இந்தியா புதிய சாதனை..!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.

Aditya L-1 (Photo Credit: @Nirmalendu88696 X)

ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் ‘ஆதித்யா எல்–1’ (Aditya L-1 ) ஆக மாற்றம் அடைந்தது. தொடர்ந்து வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகிய மையங்கள் பங்களிப்புடன் ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. Hair Mask: கூந்தலை பளபளப்பாக்கும் வாழைப்பழ மாஸ்க்.. முடி இவ்ளோ அழகா இருக்குமா?.!

இந்தியா புதிய சாதனை: இந்த விண்கலம் சுமார் 4 மாதகாலமாக (127 நாட்கள்) சூரியனை நோக்கி சீராக பயணித்து. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின் தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.