ஜனவரி 08, சென்னை (Chennai): தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கு காரணம், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். மேலும் இதிலுள்ள சிலிகா என்னும் நுண்சத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகிறது. இதை நேரடியாக மாஸ்காக முடிகளில் பயன்படுத்தையில் அதிக நன்மையை நேரடியாகவே தருகிறது. மேலும் இது பாக்டீரியா, பூஞ்சை பாதிப்பை நீக்கி, பொடுகு தொல்லையை தடுக்கிறது. வாழைப்பழத்தில் மாஸ்க் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைப்பதோடு பளபளப்பாக்கவும் செய்கிறது.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
தயிர்- 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கற்றாழைச்சாறு - தேவைக்கேற்ப Govt Bus Strike: பொங்கல் நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்... போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
செய்முறை: வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். இதனுடன் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய், கற்றாழைச்சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து கிரீம் போல எடுத்துக்கொள்ள வேண்டும். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தயாரித்து வைத்த கலவையை தலைப்பகுதி முழுவதும் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் பின் கழித்து ரசாயனங்கள் இல்லாத ஷாம்பு அல்லது வெறும் தண்ணீரில் குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்துவந்தால் பொடுகு பிரச்சினை விரைவில் தீரும். அதோடு பளபளப்பாகவும் இருக்கும். தேங்காய்ப்பால் தலைமுடிக்கு பொலிவைத் தருவதால் கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம்.
கூந்தலுக்கான வாழைப்பழத்தில் செய்யும் பிற மாஸ்க்குகள்
வாழைப்பழ கேரட் மாஸ்க்: வாழைப்பழத்துடன் கேரட் சேர்த்து தலை முடிக்கு பயன்படுத்தும் போது முடி கொட்டுவது நிற்கும் அதோடு இளநரையையும் சரி செய்கிறது. தலைக்கு ரத்தவோட்டத்தை அதிகரித்து முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க வைக்கிறது. வாழைப்பழத்துடன் 1 கேரட், 1ஸ்பூன் தேன், 1ஸ்பூன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்ஹ்த்டு அரைத்து பேஸ்டாக தலையில் தடவி 30 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். இது மாதம் 4 முறை செய்து வரலாம். Child Dies In Wall Collapse: சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி... கனமழையால் நேர்ந்த சோகம்..!
வாழைப்பழ முட்டை மாஸ்க்: முட்டை சாதாரணமாகவே முடி வளர்ச்சிக்கு அதிக பயன்களைத் தரும். இதை வாழைப்பாழத்துடன் சேர்த்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். மேலும் கூந்தல் மிருதுவாகவும் இருக்கும். வாழைப்பழம் 2, அதனுடன் 2 முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை சேர்த்து கிரீம் பதத்திற்கு கலந்து கொள்ளவேண்டும். இதை முடி முழுவதும் தடவி 15 நிமிடத்திற்கு பின்னர் லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.
வாழைப்பழ தேன் மாஸ்க்: தேனில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள், கூந்தல் மற்றும் முடியின் வேரில் ஏற்படும் வறட்சி தன்மையை குறைத்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஈரப்பதத்தையும் அளிக்கிறது. இதனால் தலையில் எரிச்சல், பொடுகு போன்ற பிரசனைகளும் தீரும். ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ்டாக மாற்றி முடியுன் வேரில் நன்கு தேய்க்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது மாதம் 3 முறை செய்து வரலாம்.