Is Cartoon Network Closing Down?: கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? வைரலாகும் ஹேஷ்டேக்..!

எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டாக் மூலம் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

CN (Photo Credit: @karthi790 X)

ஜூலை 09, வாஷிங்டன் (Technology News): 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான சேனல் என்றால் அது கண்டிப்பாக கார்ட்டூன் நெட்வொர்க் தான். டாம் அண்ட் ஜெர்ரி, பென் 10, டீன் டைட்டன்ஸ், பவர் பப் கேர்ள்ஸ், பாப்பாய் என பல அற்புதமான பொம்மை படங்கள் நம் பார்ப்பதற்கு காரணமாக இருந்ததே கார்ட்டூன் நெட்வொர்க் தான். காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஒரு அரை மணி நேரமாவது பார்த்து விட்டு சென்று விடுவோம். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் தூங்கும் வரை அந்த சேனல் தான் ஓடும். அந்த அளவிற்கு குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது தான் கார்ட்டூன் நெட்வொர்க் (Cartoon Network).

ஹேஷ்டாக்: இந்நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து #RIPCartoonNetwork என்ற ஹேஷ்டாக்களும் ட்ரெண்டிங்கில் உள்ளன. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வராத நிலையில் உண்மையிலேயே கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. Sunita Williams Return From Space: விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்.. பூமிக்கு எப்போது வருகை?.!

கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா?: அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னட் என்ற என்ற எக்ஸ் பக்கம் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்ற ஒரு அனிமேஷனை வெளியிட்டு உள்ளது. இதிலிருந்து தான் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக தகவல்கள் பரவியது. ஆனால் உண்மையில் அந்த சேனல் மூடப்படவில்லை. அந்த அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னட் என்பவர்கள் என்ற RIPCartoonNetwork ஹேஷ்டாக்கை பயன்படுத்தி தொழில் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.