PM Modi to Launch BSNL 4G (Photo Credit: @Indianinfoguide X)

செப்டம்பர் 26, டெல்லி (Delhi News): டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில், நாட்டின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை (BSNL 4G) பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நாளை (செப்டம்பர் 27) தொடங்கி வைக்கிறார். இந்தியா முழுவதும் 97,500 கோபுரங்களுடன் 4ஜி நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது. ரூ. 37,284 கோடி திட்டத்தின் கீழ், 26,700 கிராமங்களை உள்ளடக்கிய 97,500 கோபுரங்களுடன் கூடிய, பிஎஸ்என்எல்-இன் உள்நாட்டு 4G நெட்வொர்க்கை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இது உலகளாவிய தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த முயற்சி, டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தின் மூலம் நாட்டில் 100% 4G செறிவூட்டலை அடைவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. TCS Q2 Results: TCS பங்குதாரர்களுக்கு இன்பச்செய்தி.. இடைக்கால டிவிடண்ட் அறிவிப்பு.!

உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனம்:

பிஎஸ்என்எல் புதிய 4G நெட்வொர்க் வெளியீடு, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RAN) தேஜாஸ் நெட்வொர்க்குகளால் உருவாக்கப்பட்டது. அதேசமயத்தில், முக்கிய நெட்வொர்க் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்திலிருந்து (C-DoT) வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப அடுக்கு, பெரிய அளவிலான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வடிவமைக்க, மேம்படுத்த மற்றும் பயன்படுத்த இந்தியாவின் திறனைக் குறிக்கிறது. இதன்மூலம், பின்லாந்து, ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனாவுடன் சேர்த்து வணிக ரீதியாக சொந்தமாக உள்நாட்டு தொலைத்தொடர்பு உபகரணங்களைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இணைந்துள்ளது.

பிஎஸ்என்எல் வளர்ச்சி:

புதிய முயற்சிகள் அனைத்தும், 20,00,000 புதிய பயனர்களுக்கு இணைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் மின்-ஆளுமைக்கான அணுகலை மேம்படுத்துகிறது. 25வது ஆண்டு நிறைவில், பிஎஸ்என்எல் இந்தியாவை வலுவான மற்றும் சுயாதீனமாக கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்குடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு வழிநடத்துகிறது. இவை, அரசாங்கத்தின் ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துகிறது. மேலும், இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் தடையற்ற 5ஜி மேம்படுத்தல்கள் உட்பட, தொலைத்தொடர்புத் துறையில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது.