Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்ச்சியில் கேலக்ஸி ரிங்கை அறிமுகம் செய்தது.

Samsung Galaxy Ring (Photo Credit: @GNT_fr X)

மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): சாம்சங் நிறுவனம் (Samsung) கேலக்ஸி ரிங் (Galaxy Ring) மாடலின் புரோட்டோ டைப்பை தான் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் இயங்குதளத்துடன் இணைக்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் நமது இதயத் துடிப்பு மானிட்டர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, தூங்கு முறை, நாம் செய்யும் உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் கண்காணிக்கும் சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. One 97 Communications Layoffs: பணி நீக்கம் செய்யப்போகும் பேடிஎம்மின் தாய் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இது போன்ற ஸ்மார்ட் ரிங் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவர இருப்பதால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு வேலை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் ஆனது உலக சந்தையில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.