Actor Salman Khan (Photo Credit: @AsliCricketer_ X)

மே 22, மும்பை (Cinema News): பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (Salman Khan), மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து, பாபா சித்திக்கின் நண்பரான நடிகர் சல்மான்கானையும் கொலை செய்ய மர்ம கும்பல் திட்டமிட்டடிருந்தது தெரியவந்தது. Ravi Mohan-Aarti Ravi Divorce Case: ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் தர வேண்டும்.. ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்..!

மர்ம நபர் கைது:

இதனால் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சல்மான் கான் வீட்டிற்கு அருகில், ஜிதேந்திர குமார் என்ற நபர் கடந்த 20ஆம் தேதி காலையில் சுற்றி வந்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர் அந்த நபரை சம்பவ இடத்தில் இருந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜிதேந்திர குமார் தனது செல்போனை தரையில் போட்டு உடைத்தார். இதனைத்தொடர்ந்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அன்று மாலை ஜிதேந்திர குமார் மீண்டும் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்றார்.

போலீஸ் விசாரணை:

இம்முறை கேலக்ஸி கட்டிடத்தில் வசிக்கும், மற்றொருவரின் காரில் மறைந்து உள்ளே செல்ல முயன்றார். ஆனால், காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சத்தீஷ்கர் என்றும், சல்மான் கானை பார்க்கும் நோக்கில் அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றதாக கூறியுள்ளார். இருப்பினும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.