Wearable Air Conditioner: "இனி ஹெட்போன் தேவையில்லை.. கழுத்துல ஏசி போட்டுக்கோங்க.." சோனியின் வியரபில் ஏர் கண்டிஷனர் வந்தாச்சு..!

சோனி நிறுவனம் புதிதாக வியரபில் ஏர் கண்டிஷனர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Wearable Air Conditioner (Photo Credit: @ashadahmed_ X)

மே 01, சென்னை (Technology News): கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணியிலிருந்தே வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை வந்துள்ளது. Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..!

இதற்காகவே சோனி நிறுவனம் இந்த ஆண்டின் சூட்டை தணிக்க உதவும் ஒரு புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் (Wearable Air Conditioner) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை சோனி நிறுவனம் சோனி ரியான் பாக்கெட் 5 (Sony Reon Pocket 5) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது மனித உடலுடன் ஒட்டி வெப்பத்தை தணிக்க அனுமதிக்கும் சிறிய வகை ஏசி (AC) சாதனம். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,000 விலை முதல் துவங்குகிறது. இது மே 15ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.