Boiling Milk (Photo Credit : Pixabay)

ஜூலை 31, சென்னை (Health Tips Tamil): கடைகளில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலை நாம் காய்ச்சி குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் வெப்பத்தால் வெளியேறி விடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பால், உற்பத்தி நிறுவனங்களால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. பால் உற்பத்தி நிறுவனங்கள் பால் பதப்படுத்தும் பணிகளின் போது பாலில் இருக்கும் தீமை செய்யும் பாக்டீரியாக்களை கொல்வதற்காக கடுமையான வெப்ப செயல்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

ஊட்டச்சத்துக்கள் அழியும் நிலை :

இதனால் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து போகும் நிலை உண்டாகிறது. தொடர்ந்து பாலை நீண்ட நேரம் வெப்பப்படுத்தும் பட்சத்தில் அதில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை பயனற்று போகின்றன. வணிக ரீதியாக கடைகளில் விற்பனையாகும் பால் பாஸ்டுரைஸ் முறையில் பாக்கெட்டிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த பாலை காலாவதி தேதிக்கு முன்னதாகவே குறைந்த அளவு வெப்பத்துடன் காய்ச்சி குடிப்பது நல்லது. Aadi Perukku 2025 Wishes: ஆடிப்பெருக்கு திருவிழா 2025.. வாழ்த்து செய்திகள் இதோ..!

மீண்டும் மீண்டும் காய்ச்சி குடிப்பதால் ஆபத்து :

அதே வேளையில் பாலை கொதிக்க விடுவது நல்லதல்ல. பாக்கெட் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சி குடிப்பது அதன் சுவை மற்றும் தன்மையை மாற்றும். இதனால் அதில் உண்டாகும் புரதங்களை செரிமானம் செய்ய மனித அமைப்பால் முடியாது. செரிமான சிக்கலும் ஏற்படும். பாஸ்டுரைஸ் பாலில் கால்சியத்தின் தரம் குறைந்து இருப்பதால் சிறுநீரக கற்கள் தொடர்பான அபாயமும் ஏற்படும். லாக்டோஸ், பால் புரதம் தொடர்பான அலர்ஜி இருப்போர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாலை தவிர்ப்பது நல்லது. செரிமானம் தொடர்பான கோளாறு இருந்தாலும் தவிர்ப்பது நல்லது.