Apple Warns iPhone Users In India: பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல்.. இந்திய ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை..!
இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ஸ்பைவேர் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 11, டெல்லி (Technology News): இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் பெகாசஸ் ஸ்பைவேர் செயலி (Pegasus Spyware). இந்நிறுவனம் ஆனது உலகம் முழுவதும் பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 45 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது தொலைபேசியையும் ஒட்டு கேட்பதற்காக இந்த செயலி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெகாசஸ் ஸ்பைவேர்: ஸ்மார்ட் போனை கண்காணிக்க அந்த போனில் பயன்படுத்தும் ஆப்பரேட்டர் பாதுகாப்பு விதிமுறைகளை தாண்டி, அந்த போனுக்கு வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம், மொபைல் பயனாளர்கள் வேறு ஒரு இணையதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டாலும், பின்னணியில் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் செயலி பதிவேற்றம் ஆகிறது. அதன் மூலம் அந்த பயனளரின் அனுமதி இன்றி அவரின் சோசியல் மீடியா பாஸ்வேர்டுகள், வங்கி தகவல்கள் என அனைத்தையும் திருடுகிறது. World Population Day 2024: உலக மக்கள் தொகை தினம்.. மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தியா..!
இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆப்பிள் போன் மற்றும் ஐபேடு பயன்படுத்துபவரின் சாதனத்தில் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023 ஆப்பிள் நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.