ஜூலை 11, புதுடெல்லி (New Delhi): மக்கள் தொகை பிரச்சினைகள், மனித வாழ்க்கை மற்றும் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களில் அவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை நாளாக (World Population Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளானது முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தொடர்ந்து 35 ஆவது வருடமாக இன்று சிறப்பிக்க உள்ளது.
முக்கியத்துவம்: கடந்த பத்து ஆண்டுகளாக உலக மக்கள் தொகை விரைவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் முக்கியமானது. எனவே குடும்ப கட்டுப்பாடு, பாலின சமத்துவம், வறுமை ஒழிப்பு, தாய்க்கும் சேர்க்கும் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தான் இந்நாளில் நோக்கமாகும். CSG Vs ITT Highlights: திருப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்; சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி..!
மக்கள் தொகை: ஐநாவின் கூற்றுப்படி உலக மக்கள் தொகையில் பெண்கள் 49.7 சதவீதமாக உள்ளனர். ஆனால் இன்றும் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவது பெண்கள்தான். மேலும் குழந்தை பிறப்பு கால மரணங்கள் 2000 ஆண்டில் இருந்து தற்போது 34 விழுக்காடு குறைந்துள்ளது. இக்காரணங்களால் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது. 2022இல் 800 கோடி மக்கள் தொகையை கொண்டிருந்த நம் உலகம் தற்போது 812 கோடி என உயர்ந்துள்ளது. 2037-ல் 900 கோடியையும் இது தொடும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு நொடியும் 4.2 பேர் பிறக்கிறார்கள் 1.8 பேர் இறக்கிறார்கள். மேலும் மக்களின் சராசரி வயது 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே உலகத்தில் ஆறு கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதே நேரம் மூன்று கோடியே 15 லட்சம் பேர் இறந்துள்ளனர். இறப்பின் விகிதத்தை விட பிறப்பின் விகிதம் அதிகமாக உள்ளது. 1974 ஆம் ஆண்டு உலகில் தற்போதைய எண்ணிக்கையில் பாதி மக்களே இருந்தனர், அதாவது வெறும் 400 கோடி. ஆனால் 2022 ஆம் ஆண்டு இது 800 கோடியை எட்டியது.
முதல் இடத்தில் இருக்கும் இந்தியா: உலகத்தில் அதிகமான மக்கள் தொகை என்றால் அது ஆசிய கண்டத்தில் தான். அதிலும் முதலில் இருப்பது இந்திய நாடு. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. இந்தியாவில் இன்று 144 கோடியை 20 லட்சம் மக்களும் சீனாவில் 142 கோடியை 51 லட்சம் மக்களும் உள்ளனர். உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் நடைபெற்று வருவதால் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உணவு, தண்ணீரி வளத்தில் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் மக்கள் கொடிய நோயின் பிடியில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. American Airlines Flight: ஓடுபாதையில் சக்கரங்களை இழந்த விமானம்; நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 176 பயணிகள்.!
தமிழக மக்கள் தொகை: தமிழக மக்கள் தொகையை பொருத்தவரை 50 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை 1901 இல் 1.92 கோடியாக இருந்துள்ளது. ஆனால் 2011ல் 7.24 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 8 கோடியை கடந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மனித வளம் இல்லாத மக்கள் தொகை வளர்ச்சியால் அனைவரும் அந்தஸ்தை பெருக்கும் அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். மேலும், இது சமூகத்தில் குற்றங்கள் ஏற்படுத்துவதோடு, மனிதத்தையும் வேரோடு அழிக்கிறது. இந்த தாக்கங்களில் இருந்து மீள உலக மக்கள் மனித வளர்ச்சியையும், மக்கள் தொகை வளர்ச்சியையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.