Things To Do Before You Sell Your Phone: பழைய போனை விற்கப் போகிறீர்களா?.. அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்..!

உங்களிடம் இருக்கும் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை விற்று விடலாம் அல்லது எக்ஸ்சேன்ஜ் செய்து விடலாம் என்கிற திட்டம் உள்ளதா? அப்போ இந்த பதிவைப் படியுங்கள்.

Smartphone (Photo Credit: Pixabay)

மார்ச் 12, புதுடெல்லி (New Delhi): உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை விற்கும் முன், முதல் வேலையாக அதிலுள்ள அனைத்து வகையான வங்கி மற்றும் யுபிஐ ஆப்களையும் (Bank and UPI Apps) டெலிட் (Delete) அல்லது அன்இன்ஸ்டால் (Uninstall) செய்து நீக்கவும். டெலிட் செய்யப்படாத ஆப்களில் இருக்கும் தரவுகளும், தகவல்களும் (Data and Details) ஆபத்தானதாக மாறலாம். பழைய போனில் உள்ள உங்களுடைய காண்டாக்ட்களை பேக்கப் எடுப்பது போலவே, அதில் உள்ள மெசேஜ்களையும், கால் ரெகார்ட்களையும் பேக்அப் எடுத்துக்கொள்ளவும் இதற்காக நீங்கள் எஸ்எம்எஸ் பேக்கப் அன்ட் ரீஸ்டோர் (SMS Backup and Restore) போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்களை பயன்படுத்தலாம். மேலும் தேவை இல்லாத மெசேஜ்களை நீக்கவும். Nayab Singh Saini to be Haryana CM: ஹரியானா அரசியலில் திருப்பம்... அடுத்த முதல்வராகும் நயாப் சிங் சைனி..!

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்கும் முன், அதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்டை அகற்றுவதை உறுதி செய்து கொள்ளவும். கூடவே சிம் கார்டையும் அகற்றவும். வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் எடுப்பதும் முக்கியம். இதன் மூலம் ஒரு புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்யும் போது, உங்களுடைய சாட் பேக்கப்பை எளிமையாக ரீஸ்டோர் செய்ய முடியும்.