Nayab Singh Saini to be Haryana CM (Photo Credit: @ANI X)

மார்ச் 12, Chandigarh (சண்டிகர்): மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஹரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் ஜனநாயக்க ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் (Haryana CM Manohar Lal Khattar ) தற்போது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவருடன் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவும் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எம்எல் கட்டார் தனது அமைச்சரவையுடன் ராஜினாமா கடிதத்தை ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் (Governor Bandaru Dattatreya) ஒப்படைத்துள்ளார் என்றனர். இதனால் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மனோகர் லால் கட்டார் மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Just One Leave In 26 Years Of Work: யார் சாமி இவர்.. 26 வருட வேலையில் ஒரே ஒரு விடுப்பு.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த முதல்வராகும் நயாப் சிங் சைனி: இதனைத் தொடர்ந்து ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி (Nayab Singh Saini) ஹரியானாவின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும் பாஜக எம்பி நயாப் சைனி ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இவர் மாநில முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்.