Passport Seva: பாஸ்போர்ட் சேவா போர்டல் சேவை மீண்டும் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பாஸ்போர்ட் சேவா போர்டல், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே, வேலை செய்ய தொடங்கியது.
செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): பாஸ்போர்ட் சேவா போர்டல் (Passport Seva Portal) மூலம் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள், தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 2 நாட்களுக்கு தற்காலிகமாக செயலிழக்கப்பட்டது. GPSP உள்ளிட்ட பாஸ்போர்ட் சேவா போர்டல் செப்டம்பர் 01 அன்று இயங்கும் என அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, திட்டமிடப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே செயல்பட்டது.
பாஸ்போர்ட் சேவா:
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா போர்டல் செயலிழக்கும் என்று முன்னதாக தெரிவித்திருந்தது. திட்டமிட்ட பராமரிப்பின் ஒரு பகுதியாக, அன்றைய தினம் போர்ட்டல் செயலிழக்கும் என்று பாஸ்போர்ட் சேவா அதிகாரப்பூர்வ இணையதளம் (Passport Seva Website) குறிப்பிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 02-ஆம் தேதி மாலை 6 மணி வரை செயல்படாது என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்கள் சரியான முறையில் மாற்றியமைக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் என்று பாஸ்போர்ட் சேவா அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்தது. National Crime Records Bureau Report: 6 ஆண்டுகளில் சுமார் 1,551 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஆன்லைன் மோசடி:
இதற்கிடையில், பல மோசடியான இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்கள், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும், பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான நேரத்தைத் திட்டமிடுவதற்கும் அதிகக் கட்டணங்களை விண்ணப்பதாரர்களிடம் இருந்து சேகரித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
இந்திய பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து குடிமக்களுக்கும், மேற்கூறிய மோசடி இணையதளங்களுக்குச் செல்லவோ அல்லது பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பான பணம் செலுத்தவோ கூடாது என்று அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாஸ்போர்ட் சேவைகளை விண்ணப்பிப்பதற்கான இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS அப்ளிகேஷன் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய 'mPassport Seva' என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்ஸையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)