செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் நாளுக்குநாள் பாலியல் குற்றங்கள் (Sexual Offenses) அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தியமாக கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், மும்பையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை, ஆந்திராவில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா என பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. பெண்கள் பணிபுரியும் இடங்களிலும், படிக்கும் பள்ளி, கல்லூரிகளிலும் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தினமும் பாலியல் பலாத்கார (Sexual Harassment) சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. பள்ளி கல்லூரியில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை, முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை என தினம்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!
இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளில் சுமார் 1,551 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு (Rape)ஆளாகி, கொலை (Murder) செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுகின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 280 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம் 207, அசாம் 205, மகாராஷ்டிரா 155, கர்நாடகா 79 வழக்குகள் பதிவாகியுள்ளது.