Medical Student Drowned In The River: ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி..!
ரஷ்யா நாட்டில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 07, மாஸ்கோ (World News): ரஷ்யாவில் உள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் 4 இந்திய மாணவர்கள் மருத்துவம் (Medical Student) பயின்று வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள வோல்கோவ் ஆற்றிற்கு (River) சென்றுள்ளனர். Married Woman Suicide: இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேசிய காதல் கணவர்; கண்டித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்..!
அப்போது, அங்கு முதலில் மாணவி ஒருவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் வகையில், அவருடன் நான்கு பேர் ஆற்றில் இறங்கியுள்ளனர். அதில் ஒருவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை, அந்நாட்டு செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் (Embassy Of India), 'உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்களை பிரிந்துள்ள குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், அவர்களுக்கு இந்நேரத்தில் தேவையான அனைத்து உதவியையும் வழங்குவோம் என்றும் பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு தொடர்ந்து முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்' எனவும் X-தள பதிவில் பதிவிட்டுள்ளது.