Australian Woman Rape: ஆஸ்திரேலிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 5 ஆண்கள் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண், பாரிஸ் நகரில் 5 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Australian Woman Rape (Photo Credit: @TimesAlgebraIND X)

ஜூலை 24, பாரிஸ் (World News): பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி அன்று 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Paris Olympics 2024) போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இதனை முன்னிட்டு பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Teenager Stabb To Death: 17 முறை சதக்., சதக்.. இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை.‌. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!

இந்நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அன்று, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், மத்திய பாரிஸில் 5 ஆண்களால் தான் பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

பிரான்ஸ் தலைநகரில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பாரிஸ் நகரில் இருப்பவர்களின் பாதுகாப்பைப் பராமரிக்கும் வகையில், மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.