Earthquake Near Guatemala-Mexico Border: அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம்.. சாலைகளுக்கு ஓடி வந்த மக்கள்..!

வட அமெரிக்கா நாடான மெக்சிகோ, ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake (Photo Credit: Pixabay)

மே 13, மெக்சிகோ (World News): வட அமெரிக்கா நாடான மெக்சிகோ (Mexico), ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஷைபஸ் மாகாணத்தில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது. TN HSC 11th Result 2024: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளனர்.