மே 14, சென்னை (Chennai): தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN HSC 11th Result) இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,25,187 பேர் இந்த தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் தனித்தேர்வர்களாக 4,945 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. சிறைவாசிகள் 187 பேர் அடங்குவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65,852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்ச்சி விகிதம்: கடந்த ஆண்டு 11ம் வகுப்புபொதுத்தேர்வில் 90.93% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.17 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.24 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,04,143 (94.69%) மாணவியர்களும், 3,35,396 (87.26%) மாணவர்களும் தேர்சி பெற்றுள்ளனர். Yellow Fever Alert: வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.!
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.27% மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8,221 மாற்றுத் திறனாளி மாணாவர்களில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.79% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.75% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.20% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.36% ஆக குறைந்துள்ளது.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதம்: மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 96.02 சதவீதத்துடன் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, ஈரோடு மாவட்டம் 95.56 சதவீதத்துடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதத்துடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும், உயிரியலில் 171 பேரும், கணிதத்தில் 779 பேரும், தாவரவியலில் 2 பேரும், விலங்கியலில் 29 பேரும், கணினி அறிவியலில் 3432 பேரும், வணிகவியலில் 620 பேரும், கணக்குப் பதிவியலில் 415 பேரும், இயற்பியலில் 696 பேரும், வேதியியலில் 493 பேரும், பொருளியலில் 741 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 288 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் 293 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.