Danish PM Attack: டென்மார்க் பிரதமர் மீது திடீர் தாக்குதல்; மர்ம நபரை கைது செய்து விசாரணை..!
டென்மார்க் நாட்டில் நடந்து செல்லும்போது, அந்நாட்டின் பிரதமரை மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 08, கோபென்ஹாகென் (World News): டென்மார்க் நாட்டின் பிரதமராக மேட் ப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) இருந்து வருகிறார். இவர், டென்மார்க்கின் மத்திய பகுதியான கோபென்ஹாகென்னில் நேற்று நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். உடனடியாக, அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் பெரும் அதிர்ச்சியடைந்தார். PM Narendra Modi Swearing Ceremony & Clash With IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் பிரதமர் மோடி பதவியேற்பு விழா; இந்தியா வெற்றி பெறுமா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
இதுகுறித்து, டென்மார்க் காவல்துறையினர், பிரதமரை தாக்கிய அந்த நபரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பிரதமர் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவரை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து, அவரை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர் என்றும் தெரிவித்தனர்.
டென்மார்க்கில் ஐரோப்பிய யூனியன் தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரதமரை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.