A Child Food Habits: கண்ணாடி, மரக்கட்டை என எதைப்பார்த்தாலும் சாப்பிடும் 3 வயது வினோத குழந்தை – காரணம் என்ன?..!

இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Baby Hold Finger (Photo Credit: Pixabay)

மார்ச் 19, லண்டன் (World News): இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரில் வசித்து வருபவர் ஸ்டேஷி ஹெர்ன். இவருக்கு மூன்று வயதில் விண்டர் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை வீட்டிற்குள் தரையில் விளையாடும்போது கீழே கிடக்கும் பொருட்களை எல்லாம் வாயில் வைப்பதும், அதை சாப்பிடுவதுமாகவே இருந்துள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் இதுபோன்றுதான் இருப்பார்கள். இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் அது தானாகவே சரியாகி விடும் என்று குழந்தையின் தாயார் நம்பினார். Pot Water Benefits: மண்பானை தண்ணீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

இந்நிலையில், அந்த குழந்தை சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள், கண்ணாடி துண்டுகள் என அனைத்தையும் குழந்தை சாப்பிடுவதை பார்த்த ஸ்டேஷி அதிர்ச்சியுற்றார். இதனையடுத்து, அவர் குழந்தையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார். மேலும், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பதாக கூறினர்.

இதுகுறித்து பேசிய ஸ்டேஷி, தனது குழந்தையின் இந்த பாதிப்பு குறித்து பெரிதும் பயமாக உள்ளது எனவும், குழந்தையை எந்நேரமும் கண்காணித்து வருவதே எனது வேலையாக மாறிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும், இதில் இருந்து எனது குழந்தையை மீட்டுத் தருமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.