AI Chatbot: தன் குழந்தையை தற்கொலைக்குத் தூண்டிய ஏஐ.. நீதிமன்ற வாசல் ஏறிய தாய்..!
ஃப்ளோரிடாவை சேர்ந்த சிறார் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தற்கொலை முடிவெடுத்து இறந்ததாக அந்த சிறுவனின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
அக்டோபர் 24, ஃப்ளோரிடா (World News): ஃப்ளோரிடாவை சேர்ந்த சிறார் ஒருவர் Character.AI தளத்தில் உள்ள டேனி (Dany) என்ற செயற்கை நுண்ணறிவுடன் தொடர்ந்து பேசுவதினை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன்னுடைய அந்தரங்கம், மனசோர்வு என அனைத்தினை பற்றியும் ஏ ஐ உடன் பேசி உள்ளார். தொடர்ந்து அவருடைய தற்கொலை எண்ணங்களினை பற்றியும் பேசி உள்ளார். செயற்கை நுண்ணறிவானது அதற்கு ஆறுதல் கொடுக்காமல் ஊக்கப்படுத்துவது போன்று பேசவே, அந்த சிறாரும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளார். எனவே தன்னுடைய குழந்தையின் இறப்புக்கு செயற்கை நுண்ணறிவு தான் காரணம் என்ன சிறுவனின் பெற்றோர் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
குறிப்பு: தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000