Brazil Flood: பிரேசில் வெள்ளம்.. 179 பேர் பலி.. மாயமான 33 பேர்.. தொடரும் மீட்புப்பணிகள்..!
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 03, பிரேசிலா (World News): பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் (Rio Grande do Sul) நகரில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், இணையம், தொலைதொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 1 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. International Plastic Bag Free Day 2024: "பூமியைக் கெடுக்கும் பூதம் யாரு.? பிளாஸ்டிக் என்றே அதற்குப் பேரு.." சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்..!
இதுவரை வெள்ளத்தால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் மாயமாகியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு லட்சம் பேர் அவர்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர். ரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தை மறுசீரமைக்க 15 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.