Woman Death Case in Kanpur (Photo Credit: @TrueStoryUP X)

அக்டோபர் 17, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரை (Kanpur) சேர்ந்தவர் ராஜேஷ். இவர், இ-ரிக்‌ஷா ஓட்டுகிறார். இவரும் அஞ்சலி (வயது 24) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பினர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்துகொண்டனர். காதல் திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். குடும்ப தகராறில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் கைது..!

பெண்ணின் சடலம் மீட்பு:

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணின் உடல் (Woman Death), அவரது மாமியார் வீட்டில் ஒரு கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் ராஜேஷ் வரதட்சணைக்காக தனது மகள் அஞ்சலியை கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.