ஜூலை 03, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் (International Plastic Bag Free Day) கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், துணி பைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரலாறு: உலகிலேயே முதன் முதலாக பிளாஸ்டிக் பையை ஒழித்த நாடு என்றால் அது வங்காள தேசம் தான். கடந்த 2022ஆம் ஆண்டு வங்காளதேசம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உள்ள பல நாடுகள் அதனை அமல்படுத்தின. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பை இல்லாத சுற்றுச்சூழல் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. Snake Found In Food: தாய்மார்க்கு கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்து தானியத்தில் கிடந்த பாம்பு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகள்: மக்கள் கட்டாயம் பிளாஸ்டிக் அவர்கள் பேக்கிங் பொருட்கள் கிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மக்கள் துணி பைகளை பயன்படுத்தலாம். மேலும் ஆராய்ச்சியாளர்கள் சுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மாற்றுப் பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை முறையாக சுழற்சி செய்து அழிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழலை நாம் மேம்படுத்தலாம்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்:
பிளாஸ்டிக் பையில் டீ வாங்காதே
பித்தப் பையில் கான்சர் வாங்காதே
வாழை இலையில் சாப்பாடு ....ஆயுசு நூறு
பிளாஸ்டிக் இலையில் சாப்பாடு .. ஆயுசு கேடு
பூமியைக் கெடுக்கும் பூதம் யாரு...?
பிளாஸ்டிக் என்றே அதற்குப் பேரு
வீதி எங்கும் பறக்குது பார் பிளாஸ்டிக் குப்பை
விழி பிதுங்கி அழுகுது பார் பூமிப் பந்து
பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரு
பூமித்தாய்க்கோ கண்ணீரு Traffic Diversions In Madurai: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள்.. கோரிப்பாளையம் வழியாக செல்வபர்களுக்கான அறிவிப்பு..!
ஒத்தை ரூபா பொருளுக்கும்... பிளாஸ்டிக் கவரா...?
ஒத்தை பைசா மதிப்பில்லாமல் பூமி.. அழியுது ஜோரா...
கொஞ்சம் கொஞ்சமாய் ...சேரும் பிளாஸ்டிக்
கெஞ்ச கெஞ்ச ...பூமியைக் கெடுக்குமே..
வேண்டும் வேண்டும் பூமி வேண்டும்
நாங்கள் வாழ பூமி வேண்டும்
காடு மேடு நாடெல்லாம் .. கிடக்குது பார் பாலிபேக்
கண்ணாமுழி திருகி சாக...... கிடக்குது பார் உலகம்
ரோசாப்பூவு.... பூமித்தாய்
நாசமாக்குது.... பிளாஸ்டிக்பேய்
- கவிதைக்கு நன்றி, முருகானந்தன்.