Train Fire Accident: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து: 5 பேர் உடல் கருகி பலி., பலர் படுகாயம்.. வங்கதேசத்தில் வன்முறையால் சோகம்?.!

வங்கதேச பிரதமர் பதவி விலகக்கூறி நடந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம், சில நேரத்தில் வன்முறையாக முடிவதால் உயிர் பலி எண்ணிக்கை நடக்கிறது.

Bangladesh Train Fire Accident (Photo Credit: @ANI X)

ஜனவரி 06, வங்கதேசம் (World News): வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து, மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோர் நகருக்கு பெனாபோல் அதிவிரைவு இரயில் (Benapole Express) பயணம் செய்தது. இந்த இரயில் அங்குள்ள சயதாபாத், கோலபாக் பகுதியில் சென்றபோது, இரயில் திடீரென தீப்பிடித்ததாக தெரியவருகிறது.

சிதறியோடிய பயணிகள்: இதனால் பதறிப்போன பயணிகள் அதிர்ந்துபோன நிலையில், நடுவழியில் இரயில் நிறுத்தப்பட்டது. பலரும் அவசர கதியில் இரயில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில், 5 பயணிகள் இரயிலுக்குள்ளேயே சிக்கியதாக தெரியவருகிறது. இதனால் அவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயில் சிக்கி 5 பேர் பலி: ஒரு இளைஞர் மட்டும், விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு, தானும் தீயின் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரயிலின் 4 பெட்டிகள் அடுத்தடுத்து தீப்பிடித்ததை தொடர்ந்து, பிற பெட்டிகள் தீப்பிடித்த பெட்டியில் இருந்து பிரிக்கப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. Girl Student Suicide: கல்லூரி வளாகத்தில் மாணவியின் விபரீத முடிவு: 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

தீ விபத்து குறித்து விசாரணை: உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான தீக்காயத்துடன் காயமடைந்தோர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தேர்தல் வன்முறை காரணமா?: வங்காளதேசத்தில் ஜனவரி 07ம் தேதி பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை நடத்த கூடாது என எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி முயற்சித்து வருகிறது. இதற்காக பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு 2 நாட்கள் முன் இரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு வன்முறை சம்பவம் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.