Bus Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் பயங்கரம்; குளத்தில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி, 35 பேர் படுகாயம்.. உயிர்தப்பியவர்கள் பகீர் வாக்குமூலம்.!
வங்கதேசத்தில் ஆண்டுக்கு பிராந்திய சாலைகளில் 44.18% விபத்துகளும், 32.55% விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 10.55% விபத்துகள் நகர்ப்புற சாலைகளிலும், 0.53% விபத்துகள் கிராமப்புற சாலைகளிலும் ஏற்படுகின்றன.
ஜூலை 23, டாக்கா (Bangladesh News): பங்களாதேஷ் நாட்டில் உள்ள பிரோஜப்பூர் பாண்டரியா (Bangladesh Bus Accident) பகுதியில் இருந்து 60 பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்து, சாட்றகண்டா பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் பயணம் செய்ததுள்ளது.
இந்த பேருந்தில் 52 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் என்ற நிலையில், 60 பயணிகளை ஏற்றிய பேருந்து ஓட்டுநர் மேற்பகுதியில் பாரத்தையும் அதிகளவு ஏற்றி இருக்கிறார். பேருந்து பாரிஸால் - க்ஹுல்ன்னு தேசிய நெடுஞ்சாலையில் 10 மணியளவில் பயணம் செய்துள்ளது.
அப்போது, அங்குள்ள சாட்றகண்டா கிராமம் அருகே, சாலையை ஒட்டிய குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததால், பலரும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டனர். Kanguva Glimpse: அட்டகாசமான தோற்றத்தில் ஒரேயொரு டயலாக்.. உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் நலம் விசாரிக்கும் சூர்யாவின் கங்குவா.!
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டவாறு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளால் துரிதமாக பலரையும் மீட்டனர். 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். சிலர் மட்டுமே எவ்வித காயமும் இன்றி தப்பித்தார்.
விபத்து குறித்து பேருந்து பயணி தெரிவிக்கையில், "அதிகளவு பாரம் ஏற்றியது மற்றும் ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு முழு காரணம்" என கூறியதாக ஏ.என்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தை பொறுத்தமட்டில் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுவதும், அதனால் பெருமளவு உயிர்கள் இழக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.