Asian Games 2023: அருணாச்சல பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா ஆசிய போட்டிகளில் முட்டுக்கட்டை: இந்தியா கடும் கண்டனம்.. மறுக்கப்படும் அனுமதி..!
சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செப்டம்பர் 22, பெய்ஜிங் (World News): இந்தியாவின் அருணாச்சல பிரதேச வீராங்கனைகளை சீனா அங்கு நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் பங்கேற்க மறுத்திருக்கிறது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று குத்துச்சண்டை (Wushu) வீராங்கனைகள், விசா பிரச்சினைகள் காரணமாக, ஹாங்சோ (Hangzhou) நகரத்தில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். Chandrayaan-3 Updates: இரண்டு வாரங்களுக்குப் பிறகு விழித்தெழப்போகும் விக்ரம் லேண்டர்: கடும் குளிரால் பாதிக்கப்படுமா.?
இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பக்சி “சீன தேசத்து அதிகாரிகள் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய வீரர்கள் சிலர் அங்கீகாரம் பெறுவதையும், ஹாங்சோவில் நடைபெறும் 19-வது ஆசிய போட்டிகளில் பங்கேற்பதையும் முன்கூட்டியே குறிவைத்து தடுத்து இருக்கின்றனர்.” என்று தெரிவித்திருக்கிறார்
மேலும் அவர், “குடியுரிமை மற்றும் இனம் சார்ந்து இந்திய மக்களை வேறுபடுத்துவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் தவிர்க்க முடியாத அங்கமாக எப்போதும் இருக்கும்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சீனாவின் இந்த செயலை கண்டித்து டெல்லி மற்றும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் (Beijing) நகரத்தில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சீனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் (Anurag Thakur) தனது சீன பயணத்தை ரத்து செய்து இருக்கிறார்.