செப்டம்பர் 22, பெங்களூர் (Technology News): நிலவில் கால் பதித்த நாலாவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்தினர். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் சந்திரயான் விண்கலத்தில் இருந்து நிலவின் தென் துறவத்தில் மென்மையாக தரையிறங்கியது.
அதைத்தொடர்ந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டது. நிலவில் ஆக்சிஜன், இரும்பு உட்பட எட்டு வகையான தாதுக்கள் இருப்பதை அது உறுதி செய்தது. நிலவின் தென் துருவத்தை புகைப்படங்கள் எடுத்து ரோவர் இஸ்ரோவுக்கு அனுப்பியது. Ghana Mass Shooting: பேருந்து பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிசூடு; 9 பேர் பரிதாப பலி.!
நிலவில் 14 நாட்கள் இரவாகவும் 14 நாட்கள் பகலாகவும் இருக்கும். கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகளை இஸ்ரோ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இன்று சூரியன் உதயமானதால் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் பகலாக இருக்கும். தூக்க நிலையில் இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டரை எழுப்பும் பணியில் இஸ்ரோ குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர். நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது நிலவின் தென் துருவத்தில் -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும். இந்த கடும் குளிரால் ரோவர் மற்றும் லேண்டரின் சோலார் பேனல்கள் பாதிப்படையாமல் இருந்தால் மட்டுமே அவை மீண்டும் செயல்பட முடியும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.