Typhoon Koinu: தைவான் நாட்டில் டிப்ஹூன் கோயினு புயல்: நிலைமையை பொருட்படுத்தாமல் விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பிய சீன ராணுவம்.!
ஆனால் வான் பாதுகாப்பு அறிகுறி மண்டலத்தை கடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை என்று தெரிகிறது.
அக்டோபர் 05, தாய்பெய் (World News): தைவான் (Taiwan) நாட்டில் புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணி வரையிலும் டிப்ஹூன் கோயினு (Typhoon Koinu) புயல் சூழ்ந்தது. இந்நிலையில் தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry), சீன ராணுவத்தின் விமானம் (Chinese Military Aircraft) மற்றும் மூன்று கடற்படை கப்பல்கள் (Navy Vessels) தைவான் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் விமானம், தைவான் நாட்டின் ஜலசந்தி நடு எல்லையை அல்லது வான் பாதுகாப்பு அறிகுறி மண்டலத்தை (Taiwan’s Air Defence Identification Zone) கடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது. Sudarsan Pattnaik Congrats to Neeraj: நீரஜ் சோப்ரா, கிஷோருக்கு தனது பாணியில் நன்றி சொன்ன பிரபல மணல் சிற்பக்கலைஞர்: கொண்டாடும் இந்தியா.!
இருப்பினும் எச்சரிக்கையாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம், உளவுத்துறையின் உதவியோடு கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளைக் கொண்டு தயார் நிலையில் இருக்கிறது. கடற்படை கப்பல்கள், விமானப்படை போர் ரோந்துகள், நிலம் சார்ந்த பாதுகாப்பு ஏவுகணைகள் என தாக்குதலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சீனாவின் பெய்ஜிங் (Beijing) தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நுழைந்து, தாக்குதல் எதுவும் மேற்கொள்ளாமல் ரகசியங்களை கண்டறிய முயற்சித்ததாக (Grey Zone Tactics) செய்திகள் தெரிவிக்கிறது.
தைவான் நாட்டில் டிப்ஹூன் கோயினு புயல் காரணமாக வணிக நிறுவனங்களும், பள்ளிகளும் மூடப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 132 மைல்கள் என்ற வேகத்தில் புயல் மேற்கு திசை நோக்கி சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று மற்றும் நாளை பலத்த மழைக்கு சாத்தியம் இருப்பதாக வானிலை நிறுவனங்கள் தெரிவிக்கிறது.