Chinese Toddler's Construction Skills: சீன குழந்தைகளை பார்த்து கத்துக்கனும்யா... விடுமுறையில் இப்படியும் நெகிழ்ச்சி செயல்.!

கோடை விடுமுறையில் சீன குழந்தைகள் வீடு கட்டுவதில் தங்களது பெற்றோர்களுக்கு உதவி செய்வது குறித்த வீடியோ வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Chinese Toddler (Photo Credit: @AjeyPPatel X)

ஜூலை 25, பெய்ஜிங் (World News): உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சம்மர் ஹாலிடே விட்டாச்சு. வீட்டில் ஒரே ரகளைதான். ஒரு கட்டத்தில் குழந்தைகளின் லூட்டி நமக்கு சலிப்பைக் கூட ஏற்படுத்தலாம். இதனால் அவர்கள் மீது தேவையில்லாத வெறுப்பு ஏற்படும். சமாளிக்கவே கஷ்டப்படும் நேரம். ஆனால் சீனாவில் உள்ள பெற்றோர்களுக்கு கோடை விடுமுறை என்றால் மிகவும் சந்தோஷமாக தான் இருக்கும். ஏனெனில் சீனாவில் உள்ள குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுக்கு வீடு கட்டுவதில் உதவி செய்கின்றனர். சின்ன ஊறுகாய் தானே என கம்பீரமாக பேசிய ஹோட்டல் உரிமையாளர்; ரூ. 35,000 அபராதம் விதித்து கலங்கடித்த நீதிமன்றம்..!

இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்களை சிறு குழந்தைகள் அழகாக சிமெண்ட் எடுத்து வீடுகளில் பூசுகின்றனர். அதுவும் அவர்களைப் பார்த்தால் புதியதாக செய்வது போன்று இல்லை. நன்கு கை தேர்ந்து மிகவும் ஸ்டைலாக செய்கின்றனர். இந்த வீடியோக்களின் கமெண்ட்களில் அனைவரும் சீன குழந்தைகளின் திறமைகளை புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர்.