E-bike battery exploded: தீப்பந்து தாக்குதலில் இருந்து தப்பித்த இரண்டு வாலிபர்கள்.! காண்போரை மிரள வைக்கும் வீடியோ.! சிட்னியில் நடந்த பயங்கரம்.!

அறையில் இருந்த வாலிபர்கள் இருவரும் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

Fireball in Sydney Hostel (Photo Credit: ANI Twitter)

அக்டோபர் 04, சிட்னி (World News): ஆஸ்திரேலியா (Australia) நாட்டில் சிட்னி (Sydney) நகரத்தில், பழுதடைந்த இ-பைக் (E-bike) பேட்டரி வெடித்ததில், இரண்டு வாலிபர்கள் நூல் இலையில் உயிர் தப்பி இருக்கின்றனர். சிட்னியில் மேட் மங்கி (Mad Monkey) விடுதியில் இன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தூராந்திர பயணம் மேற்கொள்ளும் (Backpackers) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 20 வயதிருக்கும் இரண்டு வாலிபர்கள், இந்த விடுதியில் தங்கி இருந்தனர். தீப்பந்து தாக்கிய போது இவர்கள் இருவரும் அறையிலிருந்து வெளியே தப்பி ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் காண்போரை மிரள வைக்கும் விதமாக இருக்கிறது. அதில் ஒருவர் சிறிய அளவு தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

டார்லிங் ஹர்ஸ்ட் சாலையில் அமைந்திருக்கும் இந்த விடுதிக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் குவிந்தது. அதனால் தீ மற்ற அறைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் 70 பேர் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, இ பைக்- ஐ இயக்கும் லித்தியம்-அயன் பேட்டரி (Lithium-ion battery), சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது வெடித்து தீ பந்து கிளம்பியது தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவில் வாரம் ஒரு முறை இது போன்ற பேட்டரி வெடிப்பு விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.