Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியல்.. முதல் இடத்தில் இருக்கும் நாடு எது?.!

2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

Corruption (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதல் இடத்தில் இருக்கும் நாடு: மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், டென்மார்க், தொடர்ந்து 6 வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, பின்லாந்து இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்போர்க் நாடுகள் ஊழலை எதிர்க்கும் நாடுகளில் டாப் 10 வரிசையில் உள்ளன. அமெரிக்கா 69வது இடத்தில் உள்ளது. Rajikiran Daughter Priya Crying Video: முடிவுக்கு வந்த நடிகர் ராஜ்கிரண் மகளின் காதல் கல்யாணம்.. கைவிட்ட கணவர் முனீஸ்ராஜா.. வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ..!

இந்தியாவின் இடம்: இதில் இந்தியா பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பாகிஸ்தான், 133 வது இடத்தில் இருக்கிறது. சீனா 76 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.