
பிப்ரவரி 12, டெல்லி (World News): உலகளவில் பொதுத்துறை முறைகேடுகளின் அளவீடாகச் செயல்படும் 2024ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வுகள் குறியீட்டின் (CPI) படி, டென்மார்க் (Denmark) உலகின் மிகக் குறைந்த ஊழல் நிறைந்த நாடாகும், அதனைத் தொடர்ந்து பின்லாந்து, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகியவை உள்ளன. 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' (Transparency International) அமைப்பு வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்று புள்ளிகள் சரிந்து 96வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. Viral Video: ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட கார்.. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்.., பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
ஊழல் குறைந்த நாடுகள்:
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு துறையில் நிலவும் ஊழல் குறித்து நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக 0 - 100 என்ற அளவை பயன்படுத்துகின்றனர். இதில் 0 - என்பது அதிக ஊழலையும், 100 என்பது குறைந்த ஊழலையும் குறிக்கும்.
இந்தியா சரிவு:
இந்த அளவீட்டின் படி, இந்தியா 180 நாடுகளில் 96வது இடத்தில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 93வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது மூன்று புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடுகளான சீனா 76, இலங்கை 121, பாகிஸ்தான் 135 மற்றும் வங்கதேசம் 149 ஆகிய தரவரிசையில் உள்ளன.