
பிப்ரவரி 21, நாசிக் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கைச் (Nashik) சேர்ந்த சிறுவன் ஆர்யன் சுக்லா (வயது 14). இவர், சிறு வயது முதலே கணிதத்தின் மீதான ஆர்வம் காரணமாக, மிக வேகமாகவும், துல்லியமாகவும் மனக்கணக்கில் சிறந்து விளங்கினார். தன்னுடைய 6 வயது முதலே உலகளவில் பல்வேறு மனக் கணித போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின், 'லோ ஷோ டீ ரெக்கார்ட்' என்ற டிவி தொடரில் பங்கேற்ற இவர், 50 ஐந்து இலக்க எண்களை கால்குலேட்டர் உதவியின்றி, 25.19 வினாடிகளுக்குள் மனதிற்குள்ளேயே வேகமாக கூட்டி சாதனை படைத்தார். 'மனித கால்குலேட்டர்' (Human Calculator) என்ற பட்டத்துடன் பல்வேறு போட்டிகளில் அசத்திய சிறுவன், சமீபத்தில் ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். Doctor Drowned in River: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்; ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு..!
மனித கால்குலேட்டர்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், இந்த சாதனைக்கான ஏற்பாட்டை கின்னஸ் (Guinness World Records) நிறுவனம் செய்திருந்தது. இதில் பங்கேற்ற ஆர்யன், முதலில், 100 நான்கு இலக்க எண்களை மனதளவில் கூட்டுவதற்கு 30.9 வினாடிகளும், 200 நான்கு இலக்க எண்களை கூட்ட, 1 நிமிடம் 9.68 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அதேபோல், 50 ஐந்து இலக்க எண்களை 18.71 வினாடிகளில் மனதளவில் கூட்டி சாதனை படைத்தார். அடுத்ததாக, 20 இலக்க எண்ணை மனரீதியாக 10 இலக்க எண்ணால், வகுக்க 5 நிமிடம் 42 வினாடிகள் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, இரண்டு ஐந்து இலக்க எண்களை, 10களின் தொகுப்பை மனரீதியாகப் பெருக்க 51.69 வினாடிகளும், இரண்டு எட்டு இலக்க எண்களை, பத்தின் தொகுப்பை 2 நிமிடம் 35.41 வினாடிகளில் பெருக்கி முடித்தார்.
5 மணிநேர பயிற்சி:
இதுகுறித்து சிறுவன் ஆர்யன் சுக்லா (Aaryan Shukla) கூறுகையில், 'போட்டிகளில் தயாராவதற்கு முன் பயிற்சி அவசியம் என்பதால், நாள்தோறும் மனக் கணக்கு தொடர்பாக 4 முதல் 5 மணிநேரம் பயிற்சி செய்கிறேன். போட்டிகளில் அமைதியாக கவனம் செலுத்த யோகா மற்றும் தியானம் எனக்கு உதவுகிறது' எனத் தெரிவித்தார்.