
மார்ச் 21, சென்னை (Technology News): சீமென்ஸ் நிறுவனம் (Siemens) அதன் டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் பிரிவை சேர்ந்த சுமார் 5,600 ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது, மொத்த பணியாளர்களில் சுமார் 8 சதவீதம் பேரை பாதிக்கும். ஜெர்மனி, சீனா போன்ற சந்தைகளில் பலவீனமான தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, நிறுவனம் அதன் உற்பத்தி திறனில் மாற்றங்களை செய்து வருவதாகவும், வேலை குறைப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் பே, போன் பே வைத்திருப்போர் கவனத்திற்கு.. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!
ஊழியர்கள் பணிநீக்கம்:
உலகெங்கிலும் உள்ள சீமென்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 68,000 ஊழியர்களில் சுமார் 8 சதவீதம் பேரை பாதிக்கும். 2017ஆம் ஆண்டுக்குப் பின், சீமென்ஸ் அறிவித்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் இதுவாகும். ஜெர்மனியில் மட்டும் சுமார் 2,600 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகளாவிய அளவில் 3,12,000 பணியாளர்களைக் கொண்ட சீமென்ஸ் நிறுவனம், சீனா மற்றும் ஜெர்மனி போன்ற முக்கியமான சந்தைகளில் பலவீனமான தேவை, அதிகரித்து வரும் போட்டியுடன் சேர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் தொழில்துறை ஆட்டோமேஷன் துறையில் ஆர்டர்கள் மற்றும் வருவாயை கணிசமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.